< Back
மாநில செய்திகள்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
20 Aug 2022 1:26 AM IST

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

சேதுபாவாசத்திரம்

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழாவையொட்டி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, தேசிய பாடல்கள் ஒப்பித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும் கல்லூரி வளாக தூய்மை, போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர் இயக்கம் தொடங்குதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பேராசிரியர்கள் ராணி, ஞானசேகரன், ராஜ்மோகன், பழனிவேல் மற்றும் அலுவலக பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்