விழுப்புரம்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|விழுப்புரம் குறுமைய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
விழுப்புரம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-2023-ம் ஆண்டுக்கான விழுப்புரம் குறுமைய விளையாட்டு போட்டிகள் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடினர். இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், உடற்கல்வி ஆசிரியர் எட்வின், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் மணிவண்ணன், நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், மெரீனா சரவணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.