< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|28 Jun 2022 11:30 PM IST
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியம் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், சிறந்த வாசகங்கள் மற்றும் ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். மேலும் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சதீஸ், செல்வம் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.