< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
26 Jun 2022 1:36 AM IST

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வள்ளியூர்:

வள்ளியூர் நகர பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்றவர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

மேலும் மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டது. வியாபாரிகளுக்கும் அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்