விருதுநகர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மேரி தலைமையில் நடைபெற்றது. டி.மானகசேரி ஊராட்சி மன்றத்தலைவி சுபிதா மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆசிரியை ஆனந்தவல்லி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில தலைமை கராத்தே பயிற்சியாளர் சென்சாய் செபஸ்தியான் தலைமையி்ல் மாணவிகள் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அறிவியல் பட்டதாரி ஆசிரியை சுப்புலட்சுமி, தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் வளர்மதி, வேல்துரைச்சி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.