< Back
மாநில செய்திகள்
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு
அரியலூர்
மாநில செய்திகள்

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
17 Oct 2023 10:39 PM IST

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 92-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை முல்லைகொடி தலைமை தாங்கினார். மணிவண்ணன் வரவேற்றார். தொடர்ந்து மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பள்ளி ஆசிரியர் பாவை சங்கர் காலமெல்லாம் கலாம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதியமைக்கு தலைமையாசிரியர் பாராட்டி பரிசு வழங்கினார். இதில் அசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்