< Back
மாநில செய்திகள்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
விருதுநகர்
மாநில செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
17 Aug 2023 2:05 AM IST

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராஜபாளையம்,

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நகரசபை அலுவலகம்

ராஜபாளையம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவர் பவித்ரா ஷியாம் தேசியக்கொடியேற்றினார். விழாவில் ஆணையாளர் பார்த்தசாரதி, கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். செட்டியார்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தலைவர் ஜெயமுருகன் தேசியக்கொடி ஏற்றினார். விழாவில் துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

சேத்தூர் பேரூராட்சி வளாகத்தில் தலைவர் பாலசுப்ரமணியன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் துணைத்தலைவர் காளீஸ்வரி, பொறுப்பு செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நாடார் மேல்நிலைப்பள்ளி

ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உறவின்முறை தலைவர் வட மலையான் காமராஜ் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். விழாவில் பள்ளிச்செயலர் அழகர் ராஜன் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். உறவின்முறை செயலர் கென்னடி, மெட்ரிக் பள்ளி செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பம் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் கணேசன் தேசியக்கொடியேற்றினார். விழாவில் துணை முதல்வர் ராஜ கருணாகரன், பொது மேலாளர் செல்வராஜ் மற்றும் தேசிய மாணவப் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டி

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரோட்டரி சங்க தலைவர் பார்த்தசாரதி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் ஜெயராம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளிச் செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஆசிரியர் வாசுகி வரவேற்றார். தலைமை ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.

ஆனந்தா வித்யாலயா

ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நிறுவனர் வைமா திருப்பதி செல்வம் தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் மேனேஜிங் டிரஸ்ட் அருணா வரவேற்றார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தாளாளர் ஆனந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் சுதா இளவரசு தேசிய கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்