செங்கல்பட்டு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியின் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியின் 139-வது ஆண்டுவிழா, திருவள்ளுவர் விழா மற்றும் விளையாட்டு கழக ஆண்டு விழா போன்றவை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மதுமிதா, மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, பள்ளியின் முன்னாள் மாணவர் வெற்றிவேல் பழனி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரையும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். பள்ளியின் முதுகலை ஆசிரியர் பாலாஜிஸ்ரீனிவாசன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ராஜமூர்த்தி ஆண்டறிக்கையை வாசித்தார், பள்ளியின் செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார், கல்வி குழு தலைவர் ராம்சுப்ரமண்யா, கல்விகுழு துணைத்தலைவர் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளியின் விளையாட்டுக்கழக ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.