< Back
மாநில செய்திகள்
நெடுந்தூர ஓட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசு
விருதுநகர்
மாநில செய்திகள்

நெடுந்தூர ஓட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
8 Oct 2023 12:40 AM IST

ெநடுந்தூர ஓட்டத்தில் வென்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் ெஜயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு மக்களிடையே உடற்தகுதியை மேம்படுத்தும் பழக்கத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் நெடுந்தூர ஓட்டப்போட்டியினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டி விருதுநகர் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலில் இருந்து தொடங்கி சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட பரிசுத்தொகையுடன் கலெக்டர் ஜெயசீலன் உயர்த்தி வழங்கிய தொகையையும் சேர்த்து முதல் பரிசாக ரூ. 15,ஆயிரம், 2-வது பரிசாக ரூ. 10ஆயிரம், 3-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 4-வது முதல் 10 இடம் வரை பெற்றவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரு பிரிவாக ேபாட்டிகள் நடைபெற்றன.

இ்ந்த போட்டியில் 236 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்