< Back
மாநில செய்திகள்
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
விருதுநகர்
மாநில செய்திகள்

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
15 Oct 2023 1:52 AM IST

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார விழா வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர், வெம்பகோட்டை பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகத்தாய், காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்