சிவகங்கை
ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
|ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே உள்ள பூசாரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பள்ளியில் உட்கட்டமைப்பு சீரமைப்பு பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வழிகாட்டுதலின் படி இந்த பள்ளி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்தது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதற்கு எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜூ, ராஜேஸ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமையாசிரியர் காசிவிஸ்வநாதன் வரவேற்றார். திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்து உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட பள்ளியை மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேசினார். பின்னர் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் எஸ்.புதூர் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், தனியார் தொண்டு நிறுவன தலைவர் மகேஸ்வர், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவம், விஜயராகவன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.