< Back
மாநில செய்திகள்
குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ரூ.10,000 பரிசு - கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
மாநில செய்திகள்

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ரூ.10,000 பரிசு - கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

தினத்தந்தி
|
30 July 2022 6:43 PM IST

குற்றாலம் சாரல் திருவிழா சின்னம் வடிவமைத்தவருக்கு ரூ 10,000 பரிசை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு சிறந்த முறையில் சின்னம் வடிவமைத்து அனுப்புபவருக்கு அதனை தேர்வு செய்து சிறப்பாக முறையில் இருந்தால் ரூ.10,000 பரிசு அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவித்திருந்தார்.

அதன்படி தென்காசியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சின்னம் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கலெக்டர் ஆகாஷ் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

மேலும் செய்திகள்