< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிறைத்துறை பணியாளர்கள் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை
|19 Jun 2023 1:02 PM IST
அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிறைத்துறை பணியாளர்கள் குழந்தைகளுக்கு பரிசுத்தொகையை சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி வழங்கினார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறைத்துறை பணியாளர்களின் குழந்தைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சென்னை சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறைத்துறை பணியாளர்களின் 20 குழந்தைகளுக்கு சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அரசு பொதுத்தேர்வில் முத்திரை பதித்த சிறைத்துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது சிறைத்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், ஆ.முருகேசன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.