விருதுநகர்
வெற்றி பெற்ற ராஜபாளையம் அணிக்கு பரிசு
|கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் இறுதிப்போட்டியில் ராஜபாளையம் அணியும், மதுரை அணியும் மோதியது. இதில் ராஜபாளையம் அணி முதலிடத்தை பெற்றது. மதுரை அணி 2-வது இடத்தை பெற்றது. போட்டிகளில் சிறந்த பேட்டராக மதுரை கிருத்திக் ஆதவனும், சிறந்த பந்து வீச்சாளராக பிரனவ் என்ற மாணவரும், சிறந்த விக்கெட் கீப்பராக கிஷோர் பாண்டியனும், சிறந்த ஆல்ரவுண்டராக கவுதம் என்ற மாணவரும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற அணியினர், சிறந்த இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பையினை கல்லூரியின் விளையாட்டு மற்றும் பாடத்திட்டம் சாரா நடவடிக்கைகளை மேம்படுத்துபவர் ராஜவேல் வழங்கி பாராட்டினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் புஷ்பராஜ் செய்திருந்தார்.