விருதுநகர்
பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்ட அமச்சூர் பளுதூக்குவோர் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி சாத்தூர் ரோட்டில் உள்ள சுவாமி வித்யாலயா மழலையர் பள்ளியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஆண்கள், பெண்கள் என 70 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் ஆசான் மகாலிங்க நாடார் நினைவு கோப்பையை சிவகாசி வீரஹனுமான் உடற்பயிற்சி நிலையமும், 2-வது பரிசு கோப்பையை விருதுநகர் கட்டையன் பரமசிவநாடார் உடற்பயிற்சி நிலையமும் கைப்பற்றியது. சிறந்து பளு தூக்கும் வீரராக சபையர் அய்யநாதன் உடற்பறிற்சி நிலையத்தை சேர்ந்த வீரர் அருண்குமார் தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன், விருதுநகர் மாவட்ட பளு தூக்கும் சங்க தலைவர் ஜெயவீரன், துணைத்தலைவர் சூரியன், செயலாளர் செந்தில்அரசு, ராம்குமார், பாலமுருகன், ஜெயகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற பளுதூக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டது.