விருதுநகர்
கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா நடுச்சூரங்குடியில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி குருநாதன் தலைமை தாங்கினார். விருதுநகர் மாவட்ட அளவில் நாட் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் 102 அணிகள் கலந்து கொண்டன. மேலும் இந்த போட்டியில் வெற்றி அணிகளுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் பரிசுகளை வழங்கினார். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்திரா தட்சிணாமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தாயில்பட்டி அணி முதல் பரிசினையும், மாவில்பட்டி அணியினர் 2-வது பரிசினையும், பொட்டல்பட்டி அணியினர் 3-வது பரிசினையும் பெற்றனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஜி.எப்.சி. கபடி குழுவினர் மற்றும் நடுச்சூரங்குடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.