விருதுநகர்
குப்பைகளை தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு பரிசு
|குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு ஒரு மாதமாக அனைத்து பகுதிகளிலும் பல்வேறு முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் குப்பைகளை தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் இருந்து தினமும் குப்பைகளை தரம் பிரித்து தரும் பொதுமக்களை பாராட்டி சிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், துணை சேர்மன் ரூபி சந்தோஷம், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், தீபா பாண்டியராஜ், சரஸ்வதி பாண்டியராஜ், நாகஜோதி ராமகிருஷ்ணன், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களை பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினர்.