< Back
மாநில செய்திகள்
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிவகங்கை
மாநில செய்திகள்

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
26 July 2023 12:45 AM IST

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

சிவகங்கை

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இதழியல் தமிழ் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்றது. அரசு அருங்காட்சியக அலுவலர் பக்கிரி சாமி வரவேற்று பேசினார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட தலைவர் பகிரத நாச்சியப்பன் பேச்சு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பேசினார்.

விழாவில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அனந்தராமன், கலைமகள் ஓவியப் பயிற்சி மையத்தின் நிறுவனர் முத்துகிருஷ்ணன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சி காளிராஜா, அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காதம்பரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு அருங்காட்சியகத்தின் இளநிலை உதவியாளர் கங்கா பிரசாத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்