< Back
மாநில செய்திகள்
விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
8 Sept 2023 2:57 AM IST

திருக்குறள் முற்றோதுதல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஆண்டு 2021-2022 அன்று திறனறி குழுவின் முன்னிலையில் திருக்குறள் முற்றோதுதல் தேர்வு நடைபெற்றது. இதன்படி திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைதேகி, வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகந்நாத், தோட்டிலோன்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ஹரி பிரசாத், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உமாமகேஸ்வரி, வேலு நாச்சியார், என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வீரச்செல்வி, வேணி, கனகவல்லி, ஜெகதீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.15 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சுசிலா, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்