தென்காசி
ஓவிய போட்டியில் பள்ளி மாணவிக்கு பரிசு
|ஓவிய போட்டியில் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
சுரண்டை:
குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு ஓவிய போட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையும் அறிவியல் மையமும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சீனியா் செண்ட்டரி பள்ளி 6-ம் வகுப்பு மாணவி சாத்விகா கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றாா்.
மாணவிக்கு மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் பாிசாக வழங்கப்பட்டது. பாிசு பெற்ற மாணவியை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிரியா் மாரிக்கனி மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளா் ஆசிரியை மகாலெட்சுமி ஆகியோா் பாராட்டினா்.