< Back
மாநில செய்திகள்
பேச்சுப்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு
அரியலூர்
மாநில செய்திகள்

பேச்சுப்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
15 Oct 2022 12:15 AM IST

பேச்சுப்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டியை மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) அறிவழகன் தொடங்கி வைத்தார். போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் 27 பேரும், கல்லூரி மாணவ-மாணவிகள் 12 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி அர்ச்சனாவும், 2-ம் இடத்தை பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர் அருண்குமாரும், 3-ம் இடத்தை அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி மகதியும் பிடித்தனர். போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசுக்கு நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவர் சாரதியும், உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யாவும் பிடித்தனர்.

இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டியில் முதல் இடத்தை ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு மாணவி நிரோஷாவும், 2-ம் இடத்தை ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு மாணவி கவுதமியும், 3-ம் இடத்தை அரியலூர் அரசு கலை கல்லூரியின் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு மாணவர் கலைவாணனும் பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்படவுள்ளது. இவை அல்லாமல் அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசு தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்