ராமநாதபுரம்
மாணவ-மாணவிகளுக்கு பரிசு
|மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் அழகன்குளம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் மேல் தளத்தில் கட்டப்பட்டு இதற்கான பல்வேறு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்றன. பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேராசிரியர், ஞான சம்பந்தன் கலந்துகொண்டு மாணவர்களின் நலன் குறித்து நீண்டநேரம் பேசினார். பழைய மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக எவ்வாறுசெயல்பட்டு வருகின்றனர் என்பதை விளக்கிபேசினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வியாளராகவும் நன்கொடையாளர் அழகன்குளம் டாக்டர். நூருல்அமீன், அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி நூலகம் வசதிக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி வாழ்த்தினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன்,செயலாளர் பக்ருல் அமீன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் சலாம், பொருளாளர் வக்கீல் அசோகன், ஆலோசகர் ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி குணசேகரன் மற்றும் லுக்மான் ஹக்கீம், தமீம் மற்றும் எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் சகுபர் உள்ளிட்ட வர்கள் செய்து இருந்தனர். விழாவில் 10, 12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குணசேகரன் மற்றும் வக்கீல் அசோகன் ஆகியோர் சார்பில் பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.