< Back
மாநில செய்திகள்
கோவை அணி பரிசு கோப்பையை வென்றது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கோவை அணி பரிசு கோப்பையை வென்றது

தினத்தந்தி
|
1 Aug 2022 10:39 PM IST

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கோவை அணி பரிசு கோப்பையை வென்றது.


மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கோவை அணி பரிசு கோப்பையை வென்றது.

கைப்பந்து போட்டி

ராமநாதபுரத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கைப்பந்து போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 14 அணிகள் கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடின.

மாநில அளவில் நடந்த அமர்வு கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் கோவை மற்றும் கன்னியாகுமரி அணிகள் மோதின. இதில் கோவை அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கோவை அணிக்கு முதல் பரிசாக ரூ.12,000 பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த கன்னியாகுமரி அணிக்கு ரூ.10ஆயிரம், 3-வது இடம் பிடித்த ராமநாதபுரம் அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு, 4-வது இடம்பிடித்த திருநெல்வேலி அணிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

பரிசு தொகை

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பரிசு தொகையை கவீரா நிறுவனத்தின் பொறுப்பாளர் வீரப்ப முயலி பரிசுத் தொகை மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் விஜயசாந்தி அறக் கட்டளை நிறுவனர் விஜயசாந்தி மற்றும் சுரேஷ் சகோதரர்கள் உள்ளிட்ட பலமுக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்