< Back
மாநில செய்திகள்
தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
நீலகிரி
மாநில செய்திகள்

தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தினத்தந்தி
|
21 Oct 2023 3:15 AM IST

தீபாவளி போனஸ் வழங்க கோரி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


குன்னூர் அருகே தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு 150 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு 12 சதவீத போனஸ் வழங்க கோரி தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தோட்ட நிர்வாக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிர்வாகம் தரப்பில் மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி சதீஷ் குமார், எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகிகள் அருள்முத்து, அந்தோணிசாமி, ஹென்றி லாரன்ஸ், ஏ.டி.பி. தொழிற்சங்க நிர்வாகிகள் சீனிவாசன், விசுவநாதன், பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் 8.55 சதவீத போனஸ் தருவதாகவும், அடுத்த மாதம் 6-ந் தேதி வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் 8-ந் தேதி சம்பளம் வழங்குவதாகவும், நிலுவை சம்பளம் 2 மாதம் கழித்து வழங்குவதாகவும் நிர்வாக தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிலாள்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்