< Back
மாநில செய்திகள்
மதுராந்தகத்தில் வருகிற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மதுராந்தகத்தில் வருகிற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

தினத்தந்தி
|
6 Dec 2022 4:13 PM IST

மதுராந்தகத்தில் வருகிற 8-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வருகிற 8-ந் தேதியன்று அன்று மதுராந்தகம் வட்டாரத்தில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் தேர்வு அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை மதுராந்தகம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.ஏ.ஆர்.திருமண மண்டபத்தித்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அதில் கூறப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்