புதுக்கோட்டை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
|கந்தர்வகோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற 19-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற அனைத்து படிப்பும் படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னணி தனியார் துறை நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புக்காக தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. மேலும், இளைஞர் திறன் திருவிழாவில் இலவச திறன் பயிற்சிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கு தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் 15 பயிற்சி நிறுவனங்களும் 6 பிற திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டு பல்வேறு திறன் பயிற்சிக்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான தேர்வாணை வழங்கப்பட உள்ளது. இலவச திறன் பயிற்சிக்கு பிறகு தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.