< Back
மாநில செய்திகள்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 150-க்கு மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதன் மூலம் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், டிரைவர் உள்ளிட்ட கல்வி தகவல்களை கொண்டவர்கள் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கான விழிப்புணர்வு வாகனத்தை நாகை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்