< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியர் - போக்சோ சட்டத்தில் கைது
|24 Jan 2023 12:31 PM IST
திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் (வயது 21) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் சசிகுமார் பேசி கொண்டிருப்பதை கண்ட பள்ளியின் முதல்வர், சசிகுமாரின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.
அதில் அந்த மாணவியின் ஆபாச படங்களை செல்போனில் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளியின் முதல்வர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.