திருப்பூர்
தனியார் பள்ளி பஸ்கள் தகுதிச்சான்று
|தனியார் பள்ளி பஸ்கள் தகுதிச்சான்று
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளி பஸ்கள் கடந்த மாதம் 25-ந் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1,667 பஸ்களில், 885 பஸ்கள் சான்றிதழ் பெற்றன. மீதம் உள்ள பஸ்களும் 2 வாரத்துக்குள் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, தற்போது வரை 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது. 315 பஸ்கள் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. இந்தநிலையில் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு முடித்து மாவட்டத்தில் தகுதிச்சான்றிதழ் பெற்ற பள்ளி பஸ்கள் குறித்த அறிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்காரணமாக இன்னும் சான்றிதழ் பெறாத, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, உடுமலை, தாராபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பஸ்களின் நிலை குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். ஆய்வுக்கு உட்படாத வாகனங்களை இயக்கக்கூடாது. 2 வாரத்துக்குள் சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.