< Back
தமிழக செய்திகள்
சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி
தமிழக செய்திகள்

சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி

தினத்தந்தி
|
11 July 2023 12:06 PM IST

பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை அருகே சருனேந்தல் பகுதியில் தனியார் பள்ளிப்பேருந்து ஒன்று கண்மாய் ஓரம் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7-ம் வகுப்பு மாணவன் ஹரி வேலன் பரிதாபமாக உயிரிழந்தான். சுமார் 20 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 மாணவர்கள் சற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 7 ஆம் வகுப்பு மாணவன் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்