< Back
மாநில செய்திகள்
இன்றுமுதல் தனியார் பால் விலை உயர்வு... லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு..!

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

இன்றுமுதல் தனியார் பால் விலை உயர்வு... லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு..!

தினத்தந்தி
|
20 Jan 2023 8:30 AM IST

இன்று முதல் தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை,

தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 62 இலிருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தயிர் (TM Curd) 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்