< Back
மாநில செய்திகள்
மத்திய-மாநில அரசுகள் தனியார் நிதி நிறுவனங்களை தடை செய்யவேண்டும் - வேல்முருகன்
மாநில செய்திகள்

மத்திய-மாநில அரசுகள் தனியார் நிதி நிறுவனங்களை தடை செய்யவேண்டும் - வேல்முருகன்

தினத்தந்தி
|
8 Aug 2022 2:57 PM IST

கந்து வட்டிக்காரர்களை விட கொடுமையான தனியார் நிதி நிறுவனங்களை தடை செய்யவேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியிருந்த ஜெயந்தி என்பவர், தற்கொலை செய்துகொண்டுள்ளார். 2 மாத தவணை தொகையை செலுத்தாததால் அந்த நிறுவன ஊழியர்கள் அவரை ஆபாசமாக திட்டியதுடன், மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகளால் அரங்கேறிய தற்கொலை நிகழ்வுகள் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனன்கள் மற்றும் கடன் செயலிகளை முடக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எனவே கந்து வட்டிக்காரர்களை விட கொடுமையான தனியார் நிதி நிறுவனங்களை மத்திய-மாநில அரசுகள் தடை செய்யவேண்டும். உயிரிழந்த ஜெயந்தி குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனம் ரூ.20 லட்சம் வழங்கவேண்டும். அவரிடம் ஆபாசமாக பேசிய ஊழியர்கள் கைது செய்யப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்