< Back
மாநில செய்திகள்
தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
16 May 2023 12:15 AM IST

வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி

சின்னசேலத்தில் உள்ள தனியார் கடலை உடைப்பு தொழிற்சாலை நிர்வாகி பெரியசாமி. இவர்தனது மனைவி, மகள், மகன், தந்தை பெயரில் தனியார் வங்கிகளில் போலியான ஆவணம் கொடுத்து ரூ.24 கோடியே 33 லட்சத்து 64 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இது சம்பந்தமாக நிர்வாகிகள், தொழிலாளர்கள், உறவினர்கள் உட்பட 46 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் மேற்படி தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் சிறுவத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கடலை உடைப்பு தொழிற்சாலை நிர்வாகி பெரியசாமி எங்களுக்கு தொழிலாளர் வாரிய அட்டை வாங்கி தருவதாக கூறி ஆதார் அட்டை நகல் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் கையெழுத்து பெற்றுள்ளார். அதன் பிறகு 27-12-2017 அன்று குறிப்பிட்ட வங்கியிலிருந்து நாங்கள் கடன் பெற்றதாக அறிக்கை வந்தது. இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகி பெரியசாமியிடம் கேட்டபோது அவர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டார். நாங்கள் வங்கியில் எந்த கடனும் வாங்கவில்லை. எங்களை ஏமாற்றி ஆதார் அட்டை நகலை பெற்றுக்கொண்டு தொழிலாளர் நல வாரியத்தில் அட்டை வாங்கி தருவதாக சொல்லி எங்களுக்கு தெரியாமல் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி உள்ளார். இந்த கடனுக்கும், எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே எங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்