< Back
மாநில செய்திகள்
மறைமலைநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தினத்தந்தி
|
19 Feb 2023 4:03 PM IST

மறைமலைநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணையை கலெக்டர் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வட்டார அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டனர். தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உடனடியாக பணி ஆணையை வழங்கினார். இதில் மகளிர் திட்ட இயக்குநர் (பொறுப்பு), செல்வகுமார், தனியார் நிறுவன அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்