< Back
மாநில செய்திகள்
மாடியில் இருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி பலி
சென்னை
மாநில செய்திகள்

மாடியில் இருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி பலி

தினத்தந்தி
|
28 May 2022 12:35 PM IST

சென்னையில் மாடியில் இருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி பலியானார்.

சென்னை சாஸ்திரிநகர் எம்.ஜி.சாலையை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 55). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 25-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் சாமிநாதன் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கால் தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்