< Back
மாநில செய்திகள்
லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி
அரியலூர்
மாநில செய்திகள்

லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி

தினத்தந்தி
|
13 Oct 2023 11:55 PM IST

லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, குழிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்(வயது 62). இவர் தற்போது அரியலூர், வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று ஓட்டக்கோவில் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிமெண்டு லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ஆண்டிமடத்தை அடுத்த ஆனாபுரியை சேர்ந்த மகாலிங்கம்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்