< Back
மாநில செய்திகள்
கார் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

கார் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி

தினத்தந்தி
|
5 Jun 2023 12:15 AM IST

விக்கிரவாண்டியில் கார் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி

விக்கிரவாண்டி

திருச்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சரவணன்(வயது 30). சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று முன் தினம் திருச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வலதுபுறம் உள்ள ஓட்டலுக்கு செல்ல முயன்றபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது தந்தை ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்