< Back
மாநில செய்திகள்
ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - போலீஸ் விசாரணை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
21 Aug 2022 6:11 PM IST

ஊரப்பாக்கத்தில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 24). இவர் கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் பெருங்களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது பின்னால் வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தீனதயாளன் பலத்த படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி தீனதயாளன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்