திருவள்ளூர்
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
|திருநின்றவூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி அடுத்த திருநின்றவூர் அருந்ததி பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தின் மூலம் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (35) இவர் சென்னை திருவல்லிக்கேனியில் தனியார் நிறுவத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 5 வயதில் நகுலன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மகனை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு சரஸ்வதி வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று பகல் ஒரு மணிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சரஸ்வதிக்கு போன் செய்து உங்கள் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி வீட்டிற்கு வந்து பார்த்து போது கணவர் ஜெகதீஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துக்கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார் ஜெகதீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலை செய்து வந்த ஜெகதீஸ்வரனுக்கு சம்பளம் சரிவர வரவில்லை என்ற மனவிரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.