< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி
|28 Nov 2022 12:15 AM IST
விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் கம்பெனி ஊழியர் பலி போலீசார் விசாரணை
விழுப்புரம்
விக்கிரவாண்டி அருகே பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 28). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது. புதுச்சேரி திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்த விஜயகுமார் நேற்று காலை குளித்துவிட்டு அங்குள்ள இரும்பு கம்பியில் ஈர துணியை உலர வைத்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.