< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
|18 July 2022 12:00 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் யாசர் அராபக் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று கரூர்- கோவை சாலையில் வேப்பம்பாளையம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் யாசர் அராபக் வந்து கொண்டிருந்தார். அப்போது பழனியில் இருந்து கரூர் நோக்கி எதிர்திசையில் வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக யாசர் அராபக் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட யாசர் அராபக் படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாசர் அராபக் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.