திருவள்ளூர்
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
|எல்லாபுரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்,
எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் லோகேஷ் (வயது 25). இவர் கன்னிகைபேர் பகுதியில் உள்ள தனியார் நிறுவத்தில் ஊழியரா பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
லோகேஷ்க்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகேஷ்க்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் லோகேஷ் பூச்சி மருந்து (விஷம்) எடுத்து குடித்தார்.
சிறிது நேரத்தில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆன்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து லோகேஷன் தந்தை வெங்கடேசன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் வயிற்று வலியால் தான் விஷம் குடித்து தற்ெகாலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
வாலிபர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.