< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
28 March 2023 12:33 AM IST

கடலூரில் மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் தூக்குப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வேடதாங்கல் பசும்பூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விஜய் (வயது 28). இவருடைய மனைவி இந்திரா (28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்தோடு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் விஜய், மனைவி இந்திராவிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் இல்லை என்று மறுத்து விட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன முடைந்த விஜய் தனியார் நிறுவனத்தில், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த விஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி இந்திரா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்