< Back
மாநில செய்திகள்
தனியார் கல்லூரி பஸ்-லாரி மோதல்
கரூர்
மாநில செய்திகள்

தனியார் கல்லூரி பஸ்-லாரி மோதல்

தினத்தந்தி
|
22 Sept 2023 12:35 AM IST

தனியார் கல்லூரி பஸ்-லாரி மோதல் விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்படும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் இருந்து வரும் வழியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நகர் வழியாக திருச்செங்கோட்டிற்கு சென்று கொண்டிருந்தது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சென்றபோது, கோவையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி நோக்கி சென்ற லாரியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து முன்னாள் அமர்ந்திருந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி பஸ்சில் வந்த மாணவ, மாணவிகள் அந்த வழியாக வந்த அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு பஸ்சில் ஏறி சென்றனர்.

மேலும் செய்திகள்