< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனியார் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
|24 Aug 2024 9:35 PM IST
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திருப்பனமூர் பகுதியில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பேருந்தும், வேனும் அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.