< Back
மாநில செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
30 April 2024 7:57 PM IST

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கத்தரி வெயில் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்