< Back
மாநில செய்திகள்
தனியார் பஸ் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தனியார் பஸ் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
30 Jun 2022 10:05 PM IST

கொடைரோடு அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து தேனி மாவட்டம் சின்னமனூருக்கு நேற்று தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை, வத்தலக்குண்டுவை சேர்ந்த இன்பராஜ் (வயது 26) ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டி தேவர்நகர் என்ற இடத்தில் பஸ் வந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி, 10 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மின்கம்பம் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளில் மதுரை பைகாராவை சேர்ந்த அங்கயர்கண்ணி (40), மதுரை கூடல் புதுநகரை சேர்ந்த பிரியதர்ஷினி (23), மதுரை அண்ணாநகரை சேர்ந்த ஜோதிமணி (50), உமாமகேஸ்வரி (32), சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ராஜகுரு (42) ஆகியோர் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இவர்களை, அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்