< Back
மாநில செய்திகள்

தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தனியார் பள்ளி பஸ் கண்ணாடி உடைப்பு

5 Aug 2023 2:00 AM IST
திருப்பனந்தாள் அருகே தனியார் பள்ளி பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பனந்தாள்;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி பஸ் டிரைவர் ராம்கி (வயது30). சம்பவத்தன்று இவர் பள்ளி முடிந்து மாணவர்களை இறக்கி விடுவதற்காக பஸ்சில் பந்தநல்லூருக்கு வந்தார். காமாட்சிபுரம் மெயின் சாலையில் அவர்கள் சென்ற போது மேலமரத்துறையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (24) ராஜேந்திரன் மகன் விஜயன் (38) ஆகிய 2 பேரும் பள்ளிக்கூட பஸ்சை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ் டிரைவரின் அருகில் உள்ள பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.இது குறித்து ராம்கி கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.