< Back
தமிழக செய்திகள்
தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
கடலூர்
தமிழக செய்திகள்

தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு

தினத்தந்தி
|
22 Aug 2023 1:05 AM IST

குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பஸ் கண்ணாடி உடைத்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருத்தாசலம் அருகே உள்ள வல்லியம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சவுந்தர்ராஜன் (வயது 38). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியபோது, அதே ஊரைச் சேர்ந்த தனசேகரன் மகன் பிரேம்குமார் (23), மணவாளன் மகன் பாலாஜி என்கிற தேவக் கிருஷ்ணன் மற்றும் 2 பேர் சேர்ந்து பஸ்சை வழிமறித்து எங்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்த மாட்டீர்களா? என்று கூறி திடீரென பஸ் மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணி தனலட்சுமி, டிக்கெட் பரிசோதகர் பிரவீன், கண்டக்டர் அய்யப்பன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி டிரைவர் சவுந்தர்ராஜன் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்