< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி அருகே சரக்கு வேன் மீது தனியார் பஸ் மோதல் - 5 பயணிகள் காயம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூந்தமல்லி அருகே சரக்கு வேன் மீது தனியார் பஸ் மோதல் - 5 பயணிகள் காயம்

தினத்தந்தி
|
27 July 2022 1:43 PM IST

பூந்தமல்லி அருகே சரக்கு வேன் மீது தனியார் பஸ் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.

காஞ்சீபுரத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் தனியார் பஸ் நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி-பெங்களூரு நெடுஞ்சாலை, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது அந்த பகுதியில் உள்ள சிப்காட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற சரக்கு வேன் மீது கட்டுப்பாட்டை இழந்த பஸ் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அருகில் இருந்த உயிர் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால் உயர் மின்கோபுர கம்பம் சாய்ந்து. சரக்கு வேன் நொறுங்கியது.

இந்த விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். பின்னர் பயணிகள் வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தை குறித்து தகவலையறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனம் மற்றும் மின் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்